KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - ONLINE TEST - OCTOBER 2022 - QUESTION 01-20

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - ONLINE TEST - OCTOBER 2022 - QUESTION 01-20 | இதில் அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். மதிப்பெண் குறைந்து இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள் . முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

மெய்ப்பொருள் காண்ப தறிவு - இக்குறளடிக்குப் பொருத்தமான வாய்ப்பாடு.

2.

ஓரிடத்தில் நின்ற சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருள் விளக்குவது :

3.

பொருத்தி விடை தேர்க.
(1) துடிப்பறை - (i) குறிஞ்சி
(2) மணமுழா - (ii) பாலை
(3) தொண்டகம் - (iii) முல்லை
(4) ஏறுகோட்பறை - (iv) மருதம்

4.

கீழ்க்காண்பவற்றுள் காலங்கரந்த பெயரெச்சத்திற்கு பொருந்தாத சொல்லைத் தேர்க.

5.

மயங்கிய - இப்பகுபதத்தில் இடம் பெற்றுள்ள இடைநிலை :

6.

வெண்பாவின் இலக்கணங்களுள் பொருந்தாதவற்றைத் தேர்க.
(i) செப்பலோசை பெற்று வரும்
(ii) ஈற்றடி முச்சீராக வரும்
(iii) ஏனைய அடிகள் அறுசீராக வரும்
(iv) விளச்சீர் மட்டுமே பயின்று வரும்

7.

கீழ்க்காண்பவற்றுள் கவிதை நூல் அல்லாததைத் தேர்க.

8.

கு.ப.ரா. ஆசிரியராகப் பணியாற்றாத இதழ்

9.

பொருத்தி விடை தேர்க.
(i) கூவிளங்கனி - (1) நேர் நேர் நிரை
(ii) தேமாங்கனி - (2) நிரை நேர் நிரை
(iii) புளிமாங்கனி - (3) நிரை நிரை நிரை
(iv) கருவிளங்கனி - (4) நேர் நிரை நிரை

10.

கம்பன், பாரதி, தாசன் சொல்லாதன சில சொல்லிட முனைவேன்' - என்றவர்.

11.

ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே' - என்று பாடியவர்.

12.

இவ்வொன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே' - எனக் கூறும் நூல் :

13.

வள்ளலின் பொருள் இரவலரின் பொருள் வள்ளலின் வறுமை இரவலரின் வறுமை - என்று கூறியவர்.

14.

பிழையா நன்மொழி' என்று வாய்மையைக் குறிப்பிடும் நூல் :

15.

அரியவற்றுள் எல்லாம் அரிதே' என்று வள்ளுவரால் குறிப்பிடப்படுவது :

16.

நந் தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர்பொருப்பிற்செந்தமிழின் பின்னுதித்த தென்றலே'- என்று தென்றல் காற்றைப் பாடியவர் :

17.

சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்தும் செப்பேடு :

18.

பொருத்தி விடை தேர்க.
(1) நுழாய் - (i) இளநெல்
(2) கருக்கல் - (ii) இளம் பாக்கு
(3) கச்சல் - (iii) பலாப் பிஞ்சு
(4) மூசு - (iv) வாழைப் பிஞ்சு

19.

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல் - இக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்.

20.

குடும்பம் வறுமையுற்ற நிலையிலும் உணவளிப்பதற்காக பணையம் வைத்த பொருளாக புறநானூறு குறிப்பிடுவது :

00:00:01



Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

Featured Post

TNPSC UNIT WISE FREE ONLINE TEST : INDIAN ECONOMY/இந்தியப் பொருளாதாரம் - SYLLABUS.

TNPSC UNIT WISE FREE ONLINE TEST : இந்தியப் பொருளாதாரம் - SYLLABUS. இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள். | Link-1 | ஐந்தாண்டு திட்ட மாதி...